Home Photo Gallery Events Temples Articles Contact Us

Article Details

நீராடும் விதி முறைகள்
Posted on: 09/03/2010
Visits:986 Comments:0
நீராடும் விதி முறைகள்.. நீரில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும். அப்போது புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதாகத் த்யானம் செய்து கொள்ள வேண்டும். ஸ்நானங்கள் பல வகை. தன் இரு கைகளையும் உயரே தூக்கிக் கொண்டு கிழக்கு நோக்கி சிறிது நேரம் கண் மூடி நிற்க தேகம் சூரியக் கிரணங்களால் புனிதமடைகிறது. மழை நீரிலும் இந்த ஸ்நானம் செய்யாலாம். இது "அக்னயக ஸ்நானம்" ஆகும். உடலை மண்ணைக் கொண்டு தூய்மை செய்து கொள்வது "மலஸ்நானம்" ஆகும். விஷ்ணுவுக்குக் புனிதமான மந்திரத்தைக் கூறி, தேவைப்படும் போதேல்லாம் மனதில் த்யானித்தல் "மனோஸ்நானம்" ஆகும்.வலது கை ஆள்காட்டி விரல் நுனியில் பித்ருக்கள் இடம், சுண்டு விரலின் நுனிப்பகுதி ப்ரஜாபதியின் இடம், கட்டை விரல் நுனிப்பகுதி ப்ரம்மன் இடம், இடது உள்ளங்கை அக்னிக்குப் புனித இடம், வலது உள்ளங்கை சோமனுக்கானது.விரல்கள் சேரும் இடங்க்ள் மகரிஷிகளுக்கு புனித இடம். நீராடும் போது அகமர்ஷணம் என்னும் கர்மா செய்வதால் நம் தேகம் பாவம் நீங்கி புனிதமடைகிறது.
Add Comments View Comments