Home Photo Gallery Events Temples Articles Contact Us

ப்ரம்மஹத்தி தோஷமும் பெண்களும்


ப்ரம்மஹத்தி தோஷமும் பெண்களும்
Article By: அட்மின் ஸ்ரீ விகனஸ டாட் காம் Posted on: 23/04/2010
Visits:1406 Comments:0
இந்திரன் ஸ்த்ரீகளின் (பெண்கள்) கூட்டத்திற்குச் சென்று அவர்களிடம் தன்னுடைய ப்ரம்மஹத்தி தோஷத்தின் ஒரு பங்கை ஏற்றுக் கொள்ளும்படி கேட்க, அவர்களும் அந்த சமயம் இந்திரனிடம் வரம் வேண்டுகிறார்கள்.ருது காலத்தில் எங்களுக்கு ஸந்ததி ஏற்பட வேண்டும். மேலும் குழந்தைப்பேறு (பிரசவம்) பெறும் வரை புருஷனிடம் சந்தோஷமாக இருக்க வேண்டும் வரம் கேட்க, அப்படியே ஆகட்டும் என்று இந்திரன் வரம் அளிக்கிறான்.அந்த ப்ரம்மஹத்தி தோஷத்தை ஏற்றுக் கொண்டதின் அடையாளம் தான், பெண்கள் மாதவிலக்கு அடைவது. இந்த ஸமயத்தில் தோஷங்கள் அதிகமாக சொல்லப்பட்டிருப்பதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 1. அவளுடன் அவசியமற்ற பேச்சைக் அக்காலத்தில் குறைக்க வேண்டும். 2. அவளுடன் கூட நெருங்கி உட்கார கூடாது. 3. அவள் சாப்பிட்ட அன்னத்தின் மிச்சத்தை புருஷன் சாப்பிட கூடாது. அந்த மூன்று தினங்கள் அவசியம் விரதம் இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் அவ்வளவுக்கவ்வளவு, பிற்பாடு பிறக்கும் குழந்தையின் க்ஷேமத்தின் பொருட்டு இவையெல்லாம் நன்றாக ஆகும்.
Add Comments View Comments