Home Photo Gallery Events Temples Articles Contact Us

கால்சியம்


கால்சியம்
Article By: அட்மின் ஸ்ரீ விகனஸ.காம் Posted on: 17/01/2011
Visits:1171 Comments:0
மனித உடலுக்குத் தேவையான தாது உப்புகளில் கால்சியம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. எலும்பு, பல் முதலியவற்றின் வளர்ச்சிக்கும் கட்டமைப்புக்கும் இது பயனாகிறது. இருதயம் இயங்குவதற்காக தசை சுருங்க வேண்டும். இத்தசை சுருங்கும் செயலுக்கு கால்சியம் தேவைப்படுகிறது. இரத்தம் உறைவதற்கு கால்சியம் தேவை கால்சியம், பால் (ஆடை எடுத்த பாலில் கூட) மோர், பாலாடை, கீரை வகைகளில் அதிகமாக உள்ளது. முள்ளுக்கீரை, அகத்திக்கீரை, கறிவேப்பிலை, புளியங்கீரை, முருங்கைக்கீரை, முளைக்கீரை, முட்டைக்கோசு, வெந்தயக்கீரை ஆகியவற்றில் கால்சியம் அதிகமாக உள்ளது. சிறு தானியங்களுள் கேழ்வரகில் கால்சியம் மிகுந்துள்ளது. பாலிலுள்ள கால்சியம் அப்படியே உடலில் உட்கிரகிக்கப்படுகிறது. காய்கறிகளில் உள்ள கால்சியம் உடன் உள்ள அமிலங்களோடு குடலில் கரையா உப்புகளாக மாறுவதால் ஓரளவே உட்கிரகிக்கப்படுகிறது. தினமும் ஒரு ஆணுக்கு 0.7 கிராமும்,பெண்ணுக்கு 1.0 கிராமும், கருவுற்ற பெண்களுக்கு 1.5 கிராமும், பாலூட்டும் தாய்க்கு 2.0 கிராமும் சுண்ணாம்புச் சத்துத் தேவைப்படுகிறது. வளர்ந்த மனிதர்களை விட குழந்தைகளுக்கும், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் கால்சியம் அதிகமாகத் தேவைப்படுகிறது.
Add Comments View Comments