Home Photo Gallery Events Temples Articles Contact Us

ஏகாதசி விரதம்


ஏகாதசி விரதம்
Article By: admin@srivikanasa.com Posted on: 10/10/2011
Visits:1480 Comments:0
சுக்ல பக்ஷத்து ஏகாதசியிலோ க்ருஷ்ண பக்ஷத்து ஏகாதசியிலோ ஒருவன் மேற்கொள்ளும் விரதம்,வாழ்க்கையில் அவனுக்கு உத்தம பொருள்கள் அனைத்தும் கிடைக்கச்செய்து மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்வதோடு, அடுத்த பிறவியில் மோக்ஷத்தையும் தருகிறது. ஏகாதசி விரதம் இருப்பவன், மிகுந்த நியமத்தோடு இருக்க வேண்டும். மாமிச போஜனமோ, ஸ்த்ரி சங்கமமோ கூடாது.ஏகாதசியிலும், துவாதசியிலும் விஷ்ணு ஸாந்நித்யாமாயிருப்பதாகச் சொல்வர். இரு நாட்களும் உபவாசமிருந்து, திரயோதசி அன்று பாரணை செய்பவன் நூறு அஸ்வமேத யாகங்கள் செய்த பலனை அடைகிறான்.அன்றைய தினம் ஏகாதசி ஒரு காலை நேரம் மட்டுமே இருந்து, பின்னர் துவாதசி வந்து விடுவதனால், அன்று முழுவதும் உபவாசமிருந்து, மறு நாள் பாரணை முடிப்பவனும் அதே பலனைப்பெறுவான். சந்திரன், தன்னுடைய பதினோராவது நாளைக் கடந்து, பன்னிரண்டாவது நாளை அடையும் தினத்தில், ஒருவன் உபவாசம் இருக்கக் கூடாது. அன்று உபவாசமிருந்தால் நரக வாசத்தையே அடைவான். அமாவாசைக்குப் பிறகு வரும் ஏகாதசி அன்று, பூச நக்ஷத்திரமும் கூடி வந்தால் அதைப் பாப நாசினி என்பர். அத்தனை விசேஷமானது. அன்று விரதம் இருப்பவன், தான் செய்த சகல பாபங்களிலிருந்தும் விடுபட்டவனாகிறான். ஏகாதசி அன்றோ, துவாதசி அன்றோ, திருவோண நக்ஷத்திரம் கூடி வந்தால் அதை விஜய திதி என்பர். அன்று விரதமிருப்பவர், எந்தத் தெய்வத்தை ஆராதிக்கிறானோ அதன் அருளுக்குப் பாத்திரமாகிறான். பங்குனி மாதத்தில் வரும் ஏகாதசி அன்று,பூச நக்ஷத்திரம் கூடி வந்தால், அன்றையத் தினத்தையும் விஜய திதி என்பர். அன்றையத் தினம் விரதமிருப்பவன் எண்ணற்ற பலங்களைப் பெறுகிறான். சுக்ல பக்ஷத்திலோ, க்ருஷ்ண பக்ஷத்திலோ வரும் ஏகாதசி அன்று விஷ்ணுவை ஆராதிப்பவன், நிறைய செல்வத்துக்கு அதிபதியாவதோடு, அவனுடைய சந்ததி மேலும் விருத்தியாகும். பல குழந்தைகளைப் பெற்று புகழோடு வாழ்ந்திருந்து, வாழ்வின் முடிவுக்குப் பின் வைகுந்தத்தை அடைவான்.
Add Comments View Comments