Home Photo Gallery Events Temples Articles Contact Us

விரதங்களில் தலையாயது ஏகாதசி விரதம்


விரதங்களில் தலையாயது ஏகாதசி விரதம்
Article By: Varagooran Narayanan Posted on: 05/07/2012
Visits:1887 Comments:0
சமஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று எனப்பொருள். அமாவாசையிலிருந்து மற்றும் பௌர்ணமியிலிருந்து பதினொராவது நாளாகும். இந்நாளில் விரதம் இருப்பதை எல்லா சாஸ்த்திரங்களும் வழியுருத்துகின்றன. மற்ற விரதங்களை விட ஏகாதசி விரதம் கடைபிடிப்பது அதிமுக்கியமானதாகும். ஏனெனில் மற்ற விரதங்களை கடைபிடிக்காவிட்டாலும் பாவங்கள் ஏதும் உண்டாவதில்லை. ஆனால் ஏகாதசி விரதத்தைக் கடைபிடிக்கவிட்டால் கொடூரமான பாவங்கள் செய்த கர்மம் உண்டாகும். பிரம்மன் படைத்த உயிர்களில் கொடூரமான பாவங்களையே அங்கங்களாக கொண்ட பாவ புருஷனும் ஒருவன். மக்களைப் பாவச்செயல்களில் செலுத்து கொடூரமான நரகத்தில் செலுத்துவதே அவனுக்கு விதிக்கப்பட்ட வேலை. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு முறை எமலோகம் சென்று பார்த்த போது அங்கு உயிர்கள் தங்களுடைய பாவ விளைவுகளினால் கொடூரமான நரகங்களில் துன்புறுவதைக் கண்டார். அவர்களிடம் தங்களுடைய பாவ விளைவுகளினால் பொடூரமான நரகங்களில் துன்புறுவதைக் கண்டார். அவர்களிடம் கருணைகொண்ட பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஏகாதசி மகிமையை அவர்களுக்கு எடுத்துரைக்க, அதை அவர்கள் கடைபிடித்த உடனே பாவங்களிலிருந்து விடுபட்டு சொர்கக லோகங்களை அடைந்தனர். அது முதல் ஏகாதசி மகிமையால் எல்லோரும் புண்ணியபுருஷராக மாறி சொர்க லோகம் நிரம்பியது. நரகங்கள் வெறிச்சோடி காலியாகவும் ஆயின. பாவப்புருஷனுக்கு துளியும் வேலையில்லாமல் போனது. இதனால் பாவப்புருஷன் பகவான் கிருஷ்ணரிம் முறையிட அதற்கு பகவான் கிருஷ்ணர் ஏகாதசி அன்று தானியம், பருப்பு (அரிசி, தானியங்கள், பருப்புவகைகள், பயறுவகைகள், இட்லி,தோசை, சப்பாத்தி, புரி உப்புமா, கடுகு,உளுந்து. தாளித்து. மற்றும் காய்கறிகளில் பீன்ஸ், அவரை, மொச்சைவகையறா) வகைகளை உண்பவர் உன் வசப்பட்டு கொடூராமான பாவங்கள் செய்த கர்மம் உண்டாகும் என்று வரமளித்தார். ஆனால் உண்ணாமல் இருக்க முடியாதவர்கள் நெய், தேங்காய் எண்ணெய், நிலக்கடலை, காய்கனிகள்,பழங்கள்,பால், தயிர் போன்றவற்றை பகவான் கிருஷ்ணருக்கு படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசிக்கு முந்திய நாளான தசமி அன்று பகல் மட்டும் உணவு உட்கொண்டு விரதம் ஆரம்பிக்க வேண்டும். அதேபோல் ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி அன்று வைஷ்ணவ நாட்காட்டியில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீர்கூட அருந்தாதவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவான் கிருஷ்ணருக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது போலவே விரதத்தை முடிப்பது மிகமிக முக்கியம் இல்லாவிடில் விரதம் இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை. அம்பரீச மஹாராஜா ஏகாதசி விரதத்தை கடைபிடித்து அதுபோலவே விரதத்தை சரியான நேரத்தில் முடித்து முழுபலனும் பெற்றார் என பாகவதம் கூறுகிறது. [தொகு]ஏகாதசி அன்று செய்ய வேண்டியதும். செய்யகூடாததும். குறிப்பாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தை சொல்வது அதிலும் குறிப்பாக கலியுக தாரகமந்திரமான ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும் எத்தனை 108 சொல்கிறோமோ அந்த அளவு பலன் தெரியும். மற்றும் பகவத்கீதை,பாகவதபுராணம் போன்ற பகவான் சம்பந்தமான புத்தகங்களை படிக்கவும். அன்று முழுவதும் சொல், செயல், சிந்தனை பகவான் கிருஷ்ணரிலேயே ஈடுபடுத்தவும். ஏகாதசி அன்று சினிமா டிவி பார்ப்பது . பரமபதம் ஆடுவதும், வீண் பேச்சு பேசி காலவிரயம் செய்ய கூடாது. மாதமாதம் வரும் ஏகாதசி விரதமிருந்தாலே பக்தி வளரும் அதிலும் வைகுண்ட ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி )அன்று முழு விரதம் இருந்தால் பகவான் கிருஷ்ணர் சுலபமாக முக்திப் பாதையை காட்டுவார் என நமது சாஸ்த்திரங்களில் உள்ளது.
Add Comments View Comments