Home Photo Gallery Events Temples Articles Contact Us

வைகானசத்தின் திருமணங்களின் நிலை?


வைகானசத்தின் திருமணங்களின் நிலை?
Article By: பரணிதரன், போரூர் Posted on: 01/08/2009
Visits:1323 Comments:3
நக்ஷத்திரத்திம் மூல நக்ஷத்திரத்தில் பிறப்பது பெண்களின் சாபமா? வேதங்களில் மூல நக்ஷத்திரத்தை பற்றி சொல்லி இருக்கிறதா? மூல நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்களை ஒதுக்கி வைப்பது ஏந்த வகையில் நியாயம்? இதைப் போன்று பிற நக்ஷத்திரத்தில்(கேட்டை, பூராடம், ஆயில்யம்) பிறக்கும் குழந்தைகளும் பாவபட்டவர்களா. குழந்தைகள் இந்த நக்ஷத்திரத்தில் பிறப்பது என்பது நம்மால் ஆகின்ற காரியமா? அனைத்தும் எம்பெருமான் என்று எல்லாவற்றிர்க்கும் கூறி கொள்ளும் நாம் இதை பற்றி சற்று சிந்தித்து பார்க்க வேண்டாமா? பிறந்தவுடன் நக்ஷத்திரத்தை மாற்றினால் தவறு இல்லையா? இப்படியே நாம் பேசி கொண்டு இருப்பதால் நம்மில் சிலர் வேறு வழி இல்லாமல் வைகானஸம் அல்லாதவர்களுக்கு மாற்றி கொடுக்கிறார்கள். இந்நிலை நீடித்தால் வைகானஸம் தழைக்குமா? இன்னும் சிலர் வைகானஸ அர்ச்சகாளை விவாஹம் பண்ணி கொள்ள தயங்குகிறார்கள். பிற வைகானஸம் அல்லாதவர்களுக்கு மாற்றி கொடுத்தாலும் கொடுக்கிறார்களே தவிர வைகானஸ அர்ச்சகாளை ஏற்பதில்லை. இதற்கு தீர்வுதான் என்ன? தயவு செய்து அனைவரும், நம் குல பெரியவாளும் இந்த விவாதத்தில் பங்கு கொண்டு இதற்கு ஒரு தீர்வு காணுமாறு கேட்டுகொள்கிறேன்.
Add Comments View Comments