Home Photo Gallery Events Temples Articles Contact Us

தைத்திரீய உபநிஷத்தில் உள்ளவை.


தைத்திரீய உபநிஷத்தில் உள்ளவை.
Article By: சுதர்சன் Posted on: 23/12/2009
Visits:1572 Comments:0
வாழ்க்கை நடக்கிறது என்பது ஒன்று, 'வாழ்க்கையை வாழ்வது' என்பது வேறு. தன் போக்கில் வாழ்க்கையை நடக்க விடாமல், சிந்தித்து வாழ சொல்கிறது தைத்திரீய உபநிஷதம். உடம்பு, உயிர், வானம், பூமி என்று நம்மிலும் பிரப பிரபஞ்சத்திலும் உள்ள பல விஷயங்களை சிந்திக்க சொல்லி, அதற்காக சுமார் 20 வகையான சிந்தனைப் பயிற்சிகளைத் தருகிறது இந்த உபநிஷதம். உலகம், மனிதன், கடவுள் ஆகிய அடிப்படை உண்மைகளுக்கு சில தெளிவான விளக்கங்களையும் இங்கு நாம் காண்கிறோம். எது கல்வி என்பது பற்றிய அற்புதமான விளக்கமும் இதில் உள்ளது. மிகவும் ஆரம்ப கால உபநிஷதங்களுள் ஒன்று தைத்திரீய உபநிஷதம்.ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முனிவர்கள் வாழ்க்கையை எவ்வளவு அற்புதமாக ஆராய்ந்துள்ளார்கள் என்பதற்கு இந்த உபநிஷதம் ஒரு சான்றாக விளங்குகிறது. தெய்வ வழிபாடுகளிலும், வைதீகச்சடங்குகளிலும், மங்கல நிகழ்ச்சிகளிலும் இந்த உபநிஷதம் அதிகமாக ஒதப்படுகிறது. யஜுர் வேதத்தில் சுக்ல யஜுர் வேதம், க்ருஷ்ண யஜூர் வேதம் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. க்ருஷ்ண யஜூர் வேதத்தில் உள்ள தைத்திரீய ஆரண்யகத்தின் 7,8,9- ஆம் பகுதிகளே தைத்திரீய உபநிஷதம். உரைநடை வடிவில் அமைந்துள்ளது இது. வைசம்பாயான முனிவரின் மாணவர்கள் தித்திரிப் பறவைகளின் (சிட்டுக் குருவி) வடிவத்தில் இந்த உபநிஷத மந்திரங்களை ஏற்றுக்கொண்டதால் இது தைத்திரீய உபநிஷதம் என்று பெயர்பெற்றது.
Add Comments View Comments