Home Photo Gallery Events Temples Articles Contact Us

ஸ்ரீ வைஷ்ணவ வைதீக வார்த்தைகள்


ஸ்ரீ வைஷ்ணவ வைதீக வார்த்தைகள்
Article By: அட்மின் ஸ்ரீ விகனஸ.காம் Posted on: 07/01/2010
Visits:1513 Comments:0
பெருமாள்------ ஸ்ரீமந் நாராயணன், விஷ்ணு, ஸம்ப்ரதாய அர்த்தம் - ராமர். எம்பெருமான்----- ஸ்ரீமந் நாராயணன், விஷ்ணு . பிராட்டி-------- ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி . தாயார்-------- ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி. நம்பெருமாள்------- ஸ்ரீரங்க கோவில் உற்சவர், ஸம்ப்ரதாய அர்த்தம் - ராமர். பெரிய பெருமாள்------ ஸ்ரீரங்க கோவில் மூலவர், ஸம்ப்ரதாய அர்த்தம் - ந‌ம் க‌ண்ண‌ன். பெரிய பிராட்டி-------- ஸ்ரீரங்கநாயகி (ஸ்ரீதேவி). தேவ பெருமாள்------- காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள். உற்சவர்-------- கோவிலிலிருந்து வெளியே எழுந்து அருளும் மூர்த்தி. மூலவர்------- கோவிலேயே நிரந்தரமாக எழுந்து அருளும் மூர்த்தி. செல்வர்------- உற்சவரின் பிரதிநிதி (உற்சவரைப் போலவே வழிபடும் மூர்த்தி). யாக பேரர்------- பவித்ரோற்சவம் முதலிய உற்சவங்களில் யாகசாலையில் எழுந்து அருளும் உற்சவ மூர்த்தி. கோயிலொழுகு----- கோவிலின் வரலாறு. கிடந்த திருக்கோலம்------- சயநினித்து எழுந்தருளும் சேவை. வீற்றிருந்த திருக்கோலம்------- அமர்ந்து எழுந்தருளும் சேவை. நின்ற திருக்கோலம்------- நின்றோ, நடந்தோ எழுந்தருளும் சேவை. ஆழ்வார்------பொதுவாக 12 ஆழ்வார்களைக் குறிக்கும், ஸம்ப்ரதாய அர்த்தம் - நம்மாழ்வார். இளைய பெருமாள்------ இலக்குவன்/லக்ஷ்மணன். எம்பெருமானார்--------இராமாநுஜாசார்யன். இளையாழ்வார்----------இராமாநுஜாசார்யன். யதிராசர்------- இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்). யதீந்திரர்------- இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்). ஸ்வாமி------ முதலாளி, ஸம்ப்ரதாய அர்த்தம் - இராமாநுஜாசார்யன். ஆழ்வான்----- கூரத்தாழ்வான். ஆண்டான்------ முதலியாண்டான். லோகாச்சார்யர்------ நம்பிள்ளையின் மற்றொரு பெயர் பட்டர்------- பராச‌ர பட்டர். நாயனார்------ அழகிய மணவாள பெருமாள் நாயனார் (பிள்ளை லோகாச்சார்யரின் தம்பி). வேதாந்தாசாரியார்------- வேதாந்த தேசிகன். ஜீயர்----- ஸன்யாசி, ஸம்ப்ரதாய அர்த்தம் - மணவாள மாமுனிகள். பெரிய ஜீயர், யதீந்திர ப்ரவணர்------ மணவாள மாமுனிகள். வரத த்வய ப்ரஸாதம்------பிள்ளை லோகாச்சார்யார் - 2 வரதனுக்கான வெகுமதி - காஞ்சி வரதன், நம்பூர் வரதாச்சாரியார். கோவில்------கோவில், ஸம்ப்ரதாய அர்த்தம் - ஸ்ரீரங்கம் மலை, திருமலை-------மலை, ஸம்ப்ரதாய அர்த்தம் - திருப்பதியிலுள்ள 7 மலைகள். பெருமாள் கோவில்-------விஷ்ணு கோவில், ஸம்ப்ரதாய அர்த்தம் - காஞ்சீபுரம். சடாரி (ஸ்ரீ சடகோபம்)------- எம்பெருமானாரின் பாத கமலங்கள். ஸ்ரீ ராமானுஜம்------ ஆழ்வார்திருநகரியிலுள்ள நம்மாழ்வாரின் பாத கமலங்கள். மதுரகவிகள்----- நம்மாழ்வாரின் பாத கமலங்கள். முதலியாண்டான்------ இராமாநுஜரின் பாத கமலங்கள். அந்ந்தாழ்வான்------ திருமலையில் இராமானுஜரின் பாத கமலங்கள். பொன்னடியாம் செங்கமலம்------- மணவாள மாமுனியின் பாத கமலங்கள். அரையர்----- எம்பெருமானின் முன் பிரபந்த்த்தை இசையுடனும் பாவத்துடனும் அனுசந்திப்பவர். தேவரீர்----- பிறரை குறிக்கும் முறை. அடியேன்----- தன்னை கூறிக்கொள்ளும் முறை. அடியோங்கள்----- தன்னை கூறிக்கொள்ளும் முறை. தாஸன்----- அடிமை, அடியேன். ஆசார்யர்------ குரு, ஆசான். பூர்வாசார்யர்------- ஆசாரியரின் முன்னோடிகள். பரமாசார்யர்----- ஆசாரியரின் ஆசார்யர், ஸம்ப்ரதாய அர்த்தம் - யமுனாச்சார்யர் (ஆளவந்தார்) திவ்யப்ரபந்தம், அருளிச்செயல்------- ஆழ்வார்களின் பாசுரங்கள். உபயவேதாந்தம்------ ஸமஸ்கிருத வேதம் (வேதம், உபநிஷது, புராணம், இதிஹாஸம்) மற்றும் திராவிட வேதம் (திவ்யப்ப்ரபந்தம்). ஸ்ரீசூக்தி------- ஆழ்வார் ஆசார்யரின் பாசுரங்கள் வ்யக்யானம்------- விளக்கம். காலக்ஷேபம்------- க்ரந்தம் மற்றும் வியாக்யான்ங்களின் வரி விளக்கங்கள்/சொற்பொழிவு உபன்யாசம் சொற்பொழிவு. உபயவிபூதி----- நித்ய மற்றும் லீலா விபூதிகள். நித்ய விபூதி------- ஸ்ரீவைகுண்டம் - எம்பெருமானின் ஆன்மீக பாகம் - லௌகீக பாகத்தின் 3 மடங்கு. லீலா விபூதி -------எம்பெருமானின் சொத்தின் லௌகீக பாகம் - ஆயிரமாயிரம் லோகங்களைக் கொண்ட 14 லோகங்கள். விரஜா------ நித்ய விபூதி மற்றும் லீலா விபூதியை பிரிக்கும் நதி விஷயந்தரம்------ எம்பெரும்மானை தவிர உள்ள மற்ற விஷயங்கள். சேஷி----- தலைவன். சேஷன்----- தொண்டன். சேஷத்வம்----- தலைவனுக்கு தொண்டனாய் பணி செய்யும் அறிவு. பார‌த‌ந்த்ரிய‌ம்------ தொண்டனாய் இருந்து தலைவனின் ஆசைகளை நிறைவேற்றுதல். அன்ய சேஷத்வம்------ எம்பெருமான் மற்றும் பாகவதர்களை தவிர மற்றுள்ளவர்களின் தொண்டனாக விளங்குதல். தேவதாந்த்ரம்------- ப்ரம்மா, சிவன், இந்திரன் மற்றும் இதர தேவதைகள். பஞ்ச ஸம்ஸ்காரம்------ ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராக நியமிக்கும் பொழுது செய்யும் 5 சடங்குகள். பர அன்ன நியமம்------ தன் வீட்டில் சமைத்த பிரஸாத்த்தை மட்டும் உட்கொள்ளுதல் (கோயில் மற்றும் மடங்கள் விதிவிலக்கு)- குறிப்பு: ஸ்ரீவைஷ்ணவர் புஜிக்கும் உணவு மற்றும் எம்பெருமானுக்கு படைக்கும் உணவுகளில் கட்டுப்பாடு உள்ளன. பொன்னடி சாற்றுதல்------ ஸ்ரீவைஷ்ணவரை இல்லத்திற்கு அழைத்தல். நோவு சாற்றிக்கொள்ளுதல்------- ஸ்ரீ வைஷ்ணவர் உடல் நலமின்மை. கண் வளருதல்------- உற‌க்க நிலை. கண்டருளப் பண்ணுதல், அமுது செய்தல்-------- சாப்பிடுதல், நெய்வேத்யம் (எம்பெருமான் மற்றும் ஸ்ரீவைஷ்ணவருக்கு உணவு பரிமாறுதல்) எழுந்தருள பண்ணுதல்------- எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யர்களை ஒரிடத்திலிருந்து மற்றொரு இட்த்திருக்கு எடுத்துச் செல்லுதல். புறப்பாடு கண்டருளல்------ திரு உலா. குடிசை------- தன் இல்லத்தை குறிக்கும் சொல். திருமாளிகை------ மற்றொரு ஸ்ரீவைஷ்ணவரின் இல்லத்தை குறிக்கும் சொல். நீராட்டம்------ குளித்தல். போனகம்------ உணவு. ப்ரஸாதம், சேஷம்-------- எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் உணவு உண்ட மிச்சம். காலக்ஷேபம் பண்ணுகிரார்-------- எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங‌க‌ள் கேட்கிறார். காலக்ஷேபம் சாதிக்கிரார்------- எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங‌க‌ள் சொல்லுகிறார். சாதித்து அருள்----- பாசுரம் மற்றும் வேதம் ஓத ஆரம்பித்தல். நாயந்தே------ அடியேன். திருநாடு அலங்கரித்தார்------ உடலை விடுத்து வைகுண்டம் எய்தல். திருவடி சம்பந்தம்----- ஆசார்யனின் சம்பந்தம். அலகிடுதல்------ பெருக்குதல் (சுத்தம் செய்தல்). ப்ரஸாதம்------- அன்னம். குழம்பமுது-------- குழம்பு/சாம்பார். சாற்றமுது------- ரசம். கரியமுது----- காய்கரி/பொரியல். திருக்கண்ணமுது----- பாயசம். தயிரமுது---- தயிர் சாதம். புளியோதரை------- புளி சாதம். அக்கார அடிசில்------ சர்க்கரையால் செய்த சாதம்.
Add Comments View Comments