Home Photo Gallery Events Temples Articles Contact Us

Article Details

வைகானஸ வழக்கங்கள்
Article By:மஹாலக்ஷ்மி விஜயராகவன் கிண்டி, சென்னை. Posted on:7/24/2009
Visits:1482 Comments:2
வைகானஸ வழக்கங்களை ஒன்று சேர்க்க வேண்டும்
நம் குலஸ்வமிகளுக்கு நமஸ்காரம். என்னுடைய பிறந்த ஊர் வைகானஸ கருப்பூர். நான் வட ஆர்காடு மாவட்டம் திருமணம் செய்து வந்தேன். இங்கு பழக்க வழக்கங்கள் மாறியுள்ளன.ஆகையால் பெரியோர்கள், ஆகம வித்வான்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வைகானஸ விதிப்படி " இதுதான் வைகானஸம், வைகானஸ சூத்ரத்தில் இப்படித்தான் கூறியுள்ளது.இதைத்தான் அனைவரும் பின்பற்ற வேண்டும்" என ஒரு விதியை நிர்ணயம் செய்ய வேண்டும். வட ஆற்காடு, தென் ஆற்காடு பெண்கள் ஒன்று சேர்ந்தால் அங்கு இது எங்க பக்க வழக்கம் என கூறுகின்றனர். எனவே இனி வரும் சந்ததியினருக்கு திருமணம், புன்யஹவாஸனம், சீமந்தம்,அப்த பூர்த்தி,ருது/பூணல், எல்லா பண்டிகைகள்........ஆகிய எல்லாவற்றிர்க்கும் ஒரே பழக்கமாக கொண்டு வர வேண்டும்.ஆகவே பெரியோர்கள் ஒன்று சேர்ந்து இந்த இணைய தளத்தின் மூலம் வெளிப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் திருமணத்தில் பெண் ஆத்து வழக்கம்,பிள்ளையாத்து வழக்கம் என்பதை மாற்ற வேண்டும்.
Add Comments Review Comments