Home Photo Gallery Events Temples Articles Contact Us

Article Details

மலர்கள்
Article By:மகாலக்ஷ்மி விஜயராகவன் Posted on:10/19/2009
Visits:1558 Comments:2
ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்களும் பயன்களும்
ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்களும் பயன்களும் பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆசிரமத்திற்குச் சென்று தியான முறைகளைக் கடைப்பிடித்து வரும் பக்தர்களுக்கு, வழிபாட்டின் போது நாம் பயன்படுத்தும் மலர்களுக்கேற்றவாறு நமக்குப் பயன்களும் கிடைக்கும் என்று ஸ்ரீ அன்னை சொல்லி இருக்கிறார். ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்களும் (மலர்கள் தமிழ்ப் பெயரிலுள்ளது) பயன்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. அல்லி - செல்வம் நாகலிங்கப்பூ - செல்வவளம் பூவரசம்பூ - உடல்நலம் வாடாமல்லி - மரணமில்லா வாழ்வு கொய்யாப்பூ - நிதானம் பூசனிப்பூ - அபரிமிதம் சாமந்தி - சக்தி பட்டிப்பூ நித்திய கல்யாணி - முன்னேற்றம் கொடிரோஸ் - சுமூகம் மயிற்கொன்றை - சித்தி குரோட்டன்ஸ் - தவறான எண்ணங்களை மறக்கும் திறன் காசாம்பூ - அற்புதம் அலரிப்பூ (கஸ்தூரிப் பட்டை) - இறைவனை நாடும் பெட்டுனியா - உற்சாகம் பாக்குமரப்பூ (கமுகு) - நிதானமான தெம்பு மனோரஞ்சிதம் - தெளிவான மனம் நந்தியாவட்டை - தூய்மையான மனம் குவளை, மணி - அரளி மனம் சூரியகாந்தி - ஒளியை நோக்கி வரும் சித்தம் புகையிலைப்பூ - பகுத்தறிவு மாம்பழம் - தெய்வஞானம் மகிழம்பழம் - பூர்த்தி செம்பருத்தி (எலுமிச்சை மஞ்சள்) - மனதின் திறன் பவழமல்லி பாரிஜாதம் - பக்தி ஆர்வம் வெண்தாமரை - தெய்வ சித்தம் செந்தாமரை - அவதாரம் தூங்கு மூஞ்சி மரப்பூ - விவேகம் காகிதப்பூ - பாதுகாப்பு வேப்பம்பூ - ஆன்மீகச்சூழல் மகிழம்பூ - பொறுமை எருக்கம்பூ - தைரியம் பன்னீர்ப்பூ - உணர்வில் சாந்தம் விருட்சிப்பூ - உடலில் அமைதி மாதுளம்பழம் - தெய்வீக அன்பு அல்லி (வெள்ளை) - பூரண செல்வம் அல்லி (மஞ்சள்) - குணச்செல்வம் கள்ளி - தனம் தென்னம்பூ - பல்வகைச் சிறப்பு உணிப்பூ - உடலின் தூய்மை புன்னைப்பூ - உடலில் அமைதி மஞ்சள் செடிப்பூ - அமைதி பண்ணைக்கீரை - மரணமிலா வாழ்வுக்கான ஆர்வம் காகிதப்பூ (வெள்ளை) - பூரண பாதுகாப்பு அசோகப்பூ - சோகமின்மை செங்காந்தள் - சச்சரவின்மை வாசனைப்புல் - உதவி பாகல்பூ - இனிமை பீர்க்கம்பூ - அன்பான மனம் ஆவாரம்பூ, பொன்னாவரை - கவனமான மனம் துலுக்க சாமந்தி - மனத்தின் தெம்பு பகல்ராணி - ஒளி துடைப்பம் - புதியன காணல் சனல்,மஞ்சி, சணப்பு - உருவகப்படுத்தும் மனம் பேரரத்தை - சொல்லறிவது துலுக்க சாமந்தி (மஞ்சள்) - மனத்தின் கடுமையற்ற மனம் அலரி (வெண்மை) -அமைதியான மனம் சிறு சம்பகம் (மர மனோரஞ்சிதம்) - தெளிவாக உணர்தல் கத்தரிப்பூ - பயமின்மை கோழிக் கொண்டைப்பூ - தீரம் செம்பருத்தி (சிகப்பு) - பொங்கி வரும் சக்தி கரிசலாங்கண்ணி (மஞ்சள்) - நுணுக்கமான முயற்சி அரளி - தவறை நேர் செய்தல் மந்தாரை - உணர்வின் வலு அகத்திப்பூ - சித்தியின் அபரிமிதம் எள்ளுப்பூ - சமரசம் சுரைக்காய்ப்பூ - உணர்வின் அபரிமிதம் காசித்தும்பை - உதாரண குணம் அலரி (இளம் சிகப்பு) - பொய்யின் சரணாகதி சம்பங்கி - புதிய சிருஷ்டி மல்லிகை - தூய்மை இரங்கூன் மல்லி, கொலுசுப்பூ - விசுவாசம் பூவரசுக் கொடி - நன்றியுணர்வு கொத்தமல்லிப்பூ - மென்மை பருத்தி ரோஜா - தெய்வ அருள் அலரி (வெள்ளை இளம் சிகப்பு சேர்ந்தது) - இறை நினைவு குழிநாவல், சதவம் - இறைவனுக்காக கொடிமுந்திரி, பச்சைத் திராட்சை, திராட்சைப் பழம் - தெய்வீக ஆனந்தம் மருக்கொழுந்து - புதிய பிறப்பு பழம் கொடுக்காத மாதுளம்பூ - தெய்வீக அன்பு தாழம்பூ - ஆன்மீக மனம் கொடிவேலம், திவிதிவி - யோகஞானம் பெருங்கள்ளி - உணர்வின் சிறப்பு நாட்டு வாதாம், பாதாம்பூ - ஆன்மீக ஆர்வம் துளசி - பக்தி தும்பைப்பூ - உண்மை வழிபாடு நாட்டு ரோஜா - சரணாகதி சீமைத்துத்தி - காணிக்கை சங்குப்பூ - ராதையின் உணர்வு பெருங்கொன்றை, இயல்வாகை - சேவை டிசம்பர்ப்பூ - விழிப்பு மரமல்லி - திருஉருமாற்றம் திருநீற்றுப்பச்சை - கட்டுப்பாடு தமரத்தக்காய் - ஸ்தாபன ஒத்துழைப்பு முருங்கைப்பூ - சுத்தமான ஸ்தாபனம் இலவமரப்பூ - செயலாற்றும் ஸ்தாபனச் சிறப்பு நித்திய கல்யாணி (இளஞ்சிகப்பு, சிகப்பு மையம்) - இடைவிடா முன்னேற்றம் நித்திய கல்யாணி (வெள்ளை) – பூரண முன்னேற்றம் கொட்டை வாழை, கல்வாழை - சக்கரங்கள் ஊமத்தை - தவம் ஆரஞ்சு நிற ரோஜா - ஆர்வமிகு பக்தி சிகப்பு நிற ரோஜா - தெய்வ பக்தியாக மாறிய ஆழ்ந்த உணர்வு வெள்ளை நிற ரோஜா - பூரணமான தெய்வபக்தி இளஞ்சிவப்பு நிற ரோஜா - சரணாகதி
Add Comments Review Comments