Home Photo Gallery Events Temples Articles Contact Us

Article Details

தேன்
Article By:வசந்தி விவேகானந்தன் Posted on:11/9/2009
Visits:1561 Comments:2
தேனின் பயன்கள்
. இரவில் தூங்கு முன் சூடான பசும் பாலில் தேன் கலந்து குடித்தால், நல்ல ஞாபக சக்தி உண்டாகும். 2.அதிகாலை வெறும் வயிற்றில் இளம் சூடான நீரில் தேன் கலந்து குடித்தால் உடல் இளைக்கும்.புது உற்சாகம் பிறக்கும். 3.சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் இரண்டு ஸ்பூண் தேன் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல், வயிற்றுக் காந்தல், அல்சர் குறையும் 4. கேரட்டை மிக்ஸியில் சாறூ எடுத்துதேன் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை குறையும். 5.இஞ்சியைத் தட்டி சாறு எடுத்துதேன் கலந்து குடித்தால், பித்தம் குறையும். உடம்பு வலி குறையும். பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு கொடுப்பது நல்லது. 6.படுக்கையில் சிறூநீர் கழிக்கும் குழந்தைக்கு அவரவர் வயதிற்கேற்ப அரைஸ்பூன் ஒரு ஸ்பூன் என தேன் கலந்து படுக்க முன் கொடுத்தால் குழந்தை படுக்கையை நனைக்காது. 7.மாதுளம்பழ ஜூஸூடன் தேன் கலந்து சாப்பிட்டால் மலச் சிக்கல் நீங்கும். 8.குழந்தைக்கு இட்லிக்கு சாஸ், கெட்ச்-அப் என கொடுக்கும் நாம் தேன் தொட்டு ஊட்டினால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.உடம்பிற்கும் நல்லது.
Add Comments Review Comments